105 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.398 ரீசார்ஜ் பிளான்

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் டெலிகாம், ஜிய நிறுவனத்துக்கு எதிராக தினமும் 1.5 ஜி.பி டேட்டா வழங்கும் ரூ.398 கட்டணத்தில் புதிய ரீசார்ஜ் பிளானை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வெளியிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக மிக கடும் வாலினை எதிர்கொண்டு வரும் ஏர்டெல் நிறுவனம், குறைந்தபட் ரீசார்ஜ் ரூ.35 கூட மேற்கொள்ளாத 5 முதல் 7 கோடி வாடிக்கையாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிளானில் பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், புதிதாக ரூ.398 திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதைத் தவிர ரூ. 419 பிளான் நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரூ.549 மற்றும் ரூ.799 பிளான்களும் நீக்கப்பட்டிருந்தது.

ஏர்டெல் ரூ. 398

ரூ.398 பிளானில் அதிகபட்ச டேட்டா சலுகையாக நாள் ஒன்றிற்கு 1.5 ஜி.பி உயர்வேக டேட்டா வழங்கப்படுவதுடன் கூடுதல் சலுகையாக தினமும் 90 குறுஞ்செய்தி, அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 70 நாட்களாகும்.

105 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.398 ரீசார்ஜ் பிளான்

இதைத்தவிர இந்நிறுவனம் ரூ.399 பிளானில் நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி உயர்வேக டேட்டா வழங்கப்படுவதுடன், இந்த பிளானில் கூடுதல் சலுகையாக தினமும் 100 குறுஞ்செய்தி, அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்களாகும்.

ஜியோ 398 Vs ஏர்டெல் 398

ஜியோ நிறுவனம் வழங்கி வருகின்ற ரூ.398 கட்டணத்திலான பிளானில் நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி உயர்வேக டேட்டா வழங்கப்படுவதுடன், ஜியோ ஆப்ஸ், மேலும் கூடுதல் சலுகையாக தினமும் 100 குறுஞ்செய்தி, அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 70 நாட்களாகும்.

105 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.398 ரீசார்ஜ் பிளான்

ஜியோ நிறுவனம் வழங்கி வரும் ரூ.349 பிளானில், ஏர்டெல் வழங்கும் ரூ.398 சலுகை இடம்பெற்றுள்ளது. எனவே ஏர்டெல் நிறுவனத்தை விட ஜியோ 4ஜி தொடர்ந்து சிறந்த டேட்டா சலுகையை வழங்கிவருவது உறுதியாகியுள்ளது.