ஜியோ உட்பட போட்டியாளர்க்களை எதிர்கொள்ள, இந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.499 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி உயர்வேக 4ஜி டேட்டாவை 82 நாட்களுக்கு வழங்க உள்ளது.

ஏர்டெல் ரூ.499 பிளான்

ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஜியோ ரூ.251 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா திட்டத்தை அறிவித்திருக்கும் நிலையி ல், இதற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் ஐபிஎல் பேக் என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா திட்டத்தை ரூ.248 கட்டணத்தில் வெளியிட்டிருந்தது.

இதுபோன்ற திட்டங்களை எதிர்கொள்ளும் நோக்கில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஏர்டெல் டிவி செயலில் காண வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ரூ.499 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள 82 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 4ஜி உயர்வேக டேட்டாவை நாள் ஒன்றுக்கு 2ஜிபி என மொத்தமாக 164ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது ஜியோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் என்ற பெயரில் செய்ற்படுத்தி வருகின்ற 91 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 498 திட்டத்துக்கு நேரடியான சவாலினை விடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம், ரூ.2199 கட்டணத்திலான ஏர்டெல் ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தில் 1200ஜிபி டேட்டா நன்மையை 300 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.