மும்பையில் ஏர்டெல் 4ஜி வோல்ட்இ சேவை தொடக்கம்இந்தியாவின் முதன்மையான ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக 4ஜி வோல்ட்இ சேவையை முதற்கட்டமாக மும்பை நகரில் இன்று முதல் தொடங்கியுள்ளது.

ஏர்டெல் வோல்ட்இ

மும்பையில் ஏர்டெல் 4ஜி வோல்ட்இ சேவை தொடக்கம்

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஒராண்டுக்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை வோல்ட்இ வாயிலாக இந்தியாவில் தொடங்கிய முதல் நிறுவனமாக இருந்த நிலையில், தற்போது இந்த வரிசையில் ஏர்டெல் வாய்ஸ் ஓவர் எல்டிஇ சேவையை முதற்கட்டமாக இன்று முதல் மும்பை தொலைத்தொடர்பு வட்டத்தில் தொடங்கியுள்ளது.

வோல்ட்இ என்றால் என்ன ?

வாய்ஸ் ஓவர் எல்டிஇ எனப்படுகின்ற (Voice over LTE VoLTE is pronounced as Vee O LTE) ஒரே சமயத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டாவை இயக்கும் நுட்பம் ஆகும். எல்டிஇ தொடர்பு உள்ள எண்ணிற்கு அழைத்தாலும் டேட்டா தொடர்ந்து இயக்கப்படும். அதுவே குறைந்த தரம் கொண்ட 3ஜி மற்றும் 2ஜி எண்களுக்கு அழைத்தால் டேட்டா தொடர்பு துண்டிக்கப்படும். டேட்டா இல்லாமல் வோல்டிஇ எண்களுக்கு அழைத்தாலும் தானாகவே டேட்டாவை நெட்வொர்க் செயல்படுத்திக் கொள்ளும். எல்டிஇ (LTE-  Long Term Evolution) என்றால் உயர்வேகத்தில் டேட்டாவை பெறலாம், அதுவே வோல்டிஇ என்றால் உயர்தரத்தில் அழைப்புகளை பெறலாம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள திட்டத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பை நகரில் உள்ள பயனாளர்களுக்கு கிடைக்கின்ற இந்த சேவையை பெற வோல்ட்இ ஆதரவு பெற்ற மொபைல்கள் பெற்றுள்ள பயனாளர்கள் தங்களது மொபைல் செட்டிங்ஸ் மாற்றம் செய்யும் முறை கீழே வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐஓஎஸ் : Settings -> Mobile Data -> Mobile Data Options -> Enable 4G -> Turn on Voice & Data
ஆண்ட்ராய்டு : Settings -> Settings -> Mobile Network -> Turn on VoLTE call

ஏர்டெல் வோல்ட்இ ஆதரவு மொபைல் விபரம் பற்றி அறிய — > www.airtel.in/volte

மும்பையில் ஏர்டெல் 4ஜி வோல்ட்இ சேவை தொடக்கம்

ஒவ்வொரு மொபைல்களுக்கும் தனிப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்பதனால் மேலதிக விபரங்களுக்கு ஆப்ரேட்டரை அனுகலாம். முதற்கட்டமாக மும்பையில் தொடங்கப்பட்டுள்ள வோல்ட்இ சார்ந்த சேவை அடுத்த வருடம் மார்ச் 2018 க்குள் நாடு முழுவதும் விரிவுப்படுத்தபட உள்ளது.

இந்நிறுவனம் 4G வோல்ட்இ ஆதரவு பெற்ற மாடலை ரூ. 2500 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

மும்பையில் ஏர்டெல் 4ஜி வோல்ட்இ சேவை தொடக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here