மத்திய அரசு உத்தரவின் படி ஆதார் எண் எனப்படும் தனித்துவமான அடையாள எண்ணை மொபைல் போன் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இணைப்பது கட்டயாம் என அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் பயனாளரகள் இணைக்கப்பட்டுள்ள விபரத்தை உறுதிப்படுத்துவது பற்றி தொடர்ந்து காணலாம்.

ஏர்டெல் சிம் –  ஆதார் கார்டு

ஆதார் எண் இணைப்பதற்கான இறுதி தீர்ப்பு வரும் வரை மொபைல் எண் , வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏர்டெல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை அறிய, உங்களது ஏர்டெல் மொபைல் எண்ணிலியிருந்து 121 என்ற எண்னுக்கு ADCHK<space>Aadhaar number என எழுது எஸ்எம்எஸ் அனுப்பினால் ஆதார் விபரம் இணைக்கப்பட்டுள்ள மெசேஜை பெறலாம் அல்லது இணைக்கப்பட்ட வில்லை என்றால் அதற்குரிய வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

ஐவிஆர் மூலம் ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி ?

1 . உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.

2. அழைத்த பின்னர் இந்திய நாட்டவரா அல்லது என்.ஆர்.ஐ அல்லது வெளிநாட்டவரா என்பதனை உறுதி செய்ய இந்திய குடிமகன் என்றால் எண் 1 அழுத்தவும்.

3. ஆதார் எண்ணை இணைக்க கோரிக்கை விடுக்க மீண்டும் எண் 1 அழுத்தவும்.

4. 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்த பின்னர் அதனை உறுதிபடுத்தி பின்னர் உங்கள் மொபைல் எண் உறுதி செய்யப்படும்.

5. பிறகு,உங்கள் பெயிலில் உள்ள மற்ற மொபைல் எண்கள், அதாவது நீங்கள் ஏர்டெல் எண் ஒன்றுக்கு மேற்பட்ட எண் வைத்திருந்தால் எத்தனை எண்கள் என்பதனை குறிப்பிட்டலாம்.

6. உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலுக்கு வருகின்ற OTP என்ற 6 இலக்க எண்ணை பதிவு செய்தால் ஆதார் எண் சரிபார்க்கப்படும்.

மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றிய பின்னர் அடுத்த 48 மணி நேரங்களில் ஆதார் எண் மொபைல் போன் எண்ணுடன் இணைக்கப்படதை உறுதி செய்யும் எஸ்.எம்.எஸ் வந்து சேரும் என உங்களுக்கு மேசேஞ் கிடைக்கப்பெறும்.