நேற்று ஏர்செல், இன்று ஏர்டெல் டவர் பிரச்சனையில் சிக்கிய வாடிக்கையாளர்கள்

இந்தியாவின் முன்னணி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் கடுமையான சிக்னல் பிரச்சனை சென்னை வட்டத்தில் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஏர்டெல் சிக்னல்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையின் சில இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விரைவில் சிகனல் பெறுவதற்கு எதுவான நடவடிக்கையை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவின் முதன்மையான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் சென்னை வட்டத்தில் மிக அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதனால் விரைவாக சிக்னல் பிரச்சைனையை சரிசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து தொலைத்தொடர்பு கோபுரங்களின் சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருந்தால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யலாம் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் சிரமமடைந்ததற்கு வருந்துகிறோம் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You