ஏர்டெல்-டெலினார் இணைப்பிற்கு சிசிஐ அனுமதி வழங்கியது..!

ஏர்டெல் நிறுவனம் டெலினார் தொலை தொடர்பு நிறுவனத்தை கையகப்படுத்தியதற்கு சிசிஐ எனப்படும் காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏர்டெல்-டெலினார்

சமீபத்தில் ஏர்டெல் மற்றும் டெலினார் இணைப்பிற்கு இந்திய பங்குச் சந்தை மற்றும் பி.எஸ்.இ. லிமிடெட் (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்கு பரிவர்த்தனை இந்திய லிமிடெட் (என்எஸ்இ) ஆகியவற்றின் அங்கீகாரத்தை ஏர்டெல் சமீபத்தில் பெற்றதை தொடர்ந்து தற்போது சிசிஐ அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

டெலிநார் சவுத் ஆசியா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, குஜராத், உத்திர பிரதேசம் (கிழக்கு), உத்திர பிரதேசம் (மேற்கு) மற்றும் அசாம் ஆகியவை ஏழு வட்டங்களில் டெலினார் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த தொலை தொடர்பு வட்டங்களை ஏர்டெல் கையகப்படுத்தியுள்ளது.

இந்த இணைப்பு ரூ.1800 முதல் ரூ.2000 கோடி விலைக்குள் டெலிநார் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

Recommended For You