ஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி

ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கி வரும் அன்லிமிடெட் திட்டங்களுக்கு எதிராக சவாலான வகையில் , பார்தி ஏர்டெல் டெலிகாம் தனது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது. வரம்பற்ற இணையம் 128 kbps வேகத்தில் கிடைக்கப் பெறும்.

ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா

ஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி

ஜியோ நிறுவனம் தனது தொடக்க நாள் முதல் வரம்பற்ற இணையம் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் நிலையில், தினசரி பயன்பாட்டு டேட்டா அளவு தீர்ந்த பிறகு ஆரம்பத்தில் ஜியோ 128 kbps வேகத்தில் , தற்போது 64 kbps வரம்பற்ற இணையத்தை வழங்கி வருகின்றது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தங்களது பெரும்பாலான திட்டங்களில் வரம்பற்ற இணையம் என்ற நோக்கித்தில் வழங்கி வருகின்றது. அந்த வரிசைய தற்போது ஏர்டெல் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.

குறிப்பாக நீங்கள் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 டேட்டா பிளானை பயன்படுத்துபவர் என்றால் உங்களக்கு நாள் ஒன்றின் பயன்பாட்டிற்கு 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. நீங்கள் தினசரி டேட்டா பயன்பாட்டினை கடந்து விட்டால் உங்களிடமிருந்து கூடுதல் கட்டணம் அல்லது ட் ஆன் பேக்குகள் அவசியம், எனவே இதற்கு தீர்வினை வழங்கும் நோக்கில் வரம்பற்ற இணையம் என்ற நோக்கத்தில் ரூ.199 கட்டணம் மற்றும் அதற்கு கூடுதலான டேட்டா திட்டங்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 128 kbps வேகத்தில் தொடர்ந்து இணையத்தை பெறலாம்.

ஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 199, ரூ 249, ரூ 349, ரூ 399, ரூ 448, ரூ 499, மற்றும் ரூ 509 என அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற இணையம் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பபாக புதிய பயனாளர்கள் அல்லது முன்பே இந்த திட்டங்களில் உள்ளவர்கள் என அனைவருக்கும் வரம்பற்ற இணையம் 128 kbps வேகத்தில் கிடைக்கப் பெறும்.

மேலும் பார்தி ஏர்டெல் தங்களது பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு வரம்பற்ற இணையம் வழங்கும் நோக்கில் குறிப்பிட்ட அளவை கடந்ததும் டேட்டா வேகம் 512Kbps ஆக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி

ஜியோ , பிஎஸ்என்எல் வரிசையில் ஏர்டெல் இணைந்துள்ளதால் மிக விரைவில் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களும் இணைய வாய்ப்புகள் உள்ளது.

ஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி

1 COMMENT

Comments are closed.