விழாக்கால சலுகையை அறிவித்துள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்கள் போன்னை புதிய 4G ஸ்மார்ட்போன்னாக மாற்றினால் உடனடி கேஷ்பேக்-ஆக 2000 ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கேஷ்பேக், வாடிக்கையாளர்களின் மை ஏர்டெல் அக்கவுண்ட்டில், 40 கூப்பன்களாக மாற்றபட்டு விடும். இந்த கூப்பன்களின் மதிப்பு 50 ரூபாயாக இருக்கும்.

இந்த டிஜிட்டல் கூப்பன்கள், ஏர்டெல் பிரிப்பெய்டு பேக்களான 199 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ்கள் அல்லது 399 ரூபாய்க்கு மேற்பட்ட போஸ்ட்பெய்டு பேமென்ட்களை செலுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் பொதும் நீங்கள் ஒரே ஒரு கூப்பனை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த ஆப்பர், புதிய $G ஸ்மார்ட்போனை ஏர்டெல் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் அல்லது ஆப்லைன் ஸ்டோர்களில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் வாங்கும் 4G சிம்களை வரும் 31ம் தேதிக்கு முன்னர் ஸ்மார்ட்போனில் இணைந்து பயன்படுத்து தொடங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பர் குறித்து பேசிய பாரதி ஏர்டெல் நிறுவன சீப் மார்க்கெட்டிங் ஆபீசர் வாணி வெங்கடேஷ், இந்த விழாக்காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை மேம்படுத்தி பிரத்தியோக ஆப்பர்களை பெற்று கொள்ளலாம். எங்கள் நிறுவனம் சார்பில் சமீபத்தில் #AirtelThanks என்ற வாடிக்கையாளர் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆப்பர் மூலம் கிடைக்கும் டிஜிட்டல் கூப்பன்கள், வாடிக்கையாளர்களின் அகவுண்ட்டில் கிரெடிட் செய்தது முதல் 40 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த கேஷ் ஆப்பர்கள் #AirtelThanks வாடிக்கையாளர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதுமட்டுமின்றி சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் 100 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ARPU செலுத்தி பிரிமியம் ZEE5 தகவல்களை ஏர்டெல் டிவி மூலம் கண்டு மகிழும் ஆப்பர் அறிமுகம் செய்தது.