ஏர்டெல் டிவி செயலி வழங்கும் ரூ. 2 கோடி பரிசை வெல்லுங்கள்

இந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு , ஏர்டெல் டிவி செயலி வாயிலாக ரூ. 2 கோடி வரை வெல்லும் வகையிலான திட்டத்தை அறிவித்துள்ளது.

ஏர்டெல் டிவி ஆப்

பார்தி ஏர்டெல் நிறுவனம், ஜியோ வருகைக்கு பின்னர் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜியோவின் தன் தனா தன் லைவ், கிரிக்கெட் பரிசு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பரிசு திட்டத்தை ஏர்டெல் டிவி ஆப் வாயிலாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் (‘Airtel TV Free Hit Live’) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டியில் கலந்து கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு தினசரி ரொக்க பரிசு மற்றும் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான தொகையை வாடிக்கையாளர்கள் வென்றிட  இயலும் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் நான்-லைவ் இது தினமும் ஐபிஎல் டி20 போட்டி துவங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு துவங்கும். இந்த போட்டியின் நேரலை ஒளிபரப்பு கிரிக்கெட் நடைபெறும் சமயத்தில் கிடைக்கப் பெறும்.
ஏர்டெல் நடத்தும் ஐபிஎல் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை மேம்படுத்தி கொண்டு போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும்.
ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் லைப் போட்டி எளிமையான கேள்விகள் அடங்கிய நேரலை விளையாட்டு ஆகும்.  இந்த போட்டியில் டிஜிட்டல் தொகுப்பாளர் வாயிலாக இந்த போட்டியை விளையாட வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியில் தினமும் இரவு 7.30 மணிக்கு உள் நுழைய வேண்டும்.
ஐபிஎல் தொடர் போட்டிகள் குறித்து 11 கேள்விகள் கேட்கப்படும், இந்த கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக போட்டியாளர்கள் அளிக்கும் ஒவ்வொரு சரியான விடைக்கும் ரன்கள் வழங்கப்படும், அதிகப்படியான கேள்விகளுக்கு மிக சரியான பதில் அளித்து இலக்கை அடையும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை அதிகமாக வழங்கப்படும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள ஏர்டெல் டிவி செயலியை உடனடியாக தரவிறக்கி பரிசுகளை வெல்லுங்கள்.

Recommended For You