ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ரெட்மி நோட் 7 போன் வாங்குபவர்களுக்கு டபுள் டேட்டா ஆஃபர் நன்மை அறிவித்துள்ளது. 249 ரூபாய் மற்றும் 349 ரூபாய் என இரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது.

100 சதவீத கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம், மொத்தமாக 1120 ஜிபி டேட்டா நன்மையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ரெட்மி நோட் 7 சீரிஸ் மற்றும் ஏர்டெல் டேட்டா ஆஃபர்

ஜியோ நிறுவனம், இதுபோன்ற சலுகைகளை பல்வேறு மொபைல் தயாரிப்பாளர்களுடன் இனைந்து வழங்கி வந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம், புதிதாக வெளியிடப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் மாடல்களான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ என இரு மாடல்களுக்கும் அறிவித்துள்ளது.

ஏர்டெல் 249 ரூபாய் கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

டேட்டா சலுகை – 4 ஜிபி உயர்வேக டேட்டா (பொதுவாக 2 ஜிபி டேட்டா மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது)

வாய்ஸ் கால் – வரம்பற்ற முறையிலான உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகள்

வேலிடிட்டி காலம் – 28 நாட்கள் ஆகும்.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் 349 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் உள்ள நன்மைகளை காணலாம்.

டேட்டா சலுகை – 6 ஜிபி உயர்வேக டேட்டா (பொதுவாக 3 ஜிபி டேட்டா மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது)

வாய்ஸ் கால் – வரம்பற்ற முறையிலான உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகள்

வேலிடிட்டி காலம் – 28 நாட்கள் ஆகும்.

இரு திட்டங்களிலும் ஏர்டெல் பிரீமியம் டிவி சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது. கூடுதல் நன்மைகளாக அன்ட்டி மால்வேர் புராடெக்‌ஷன், ஆப் அட்வைசர், வெப் புராடெக்‌ஷன், ஸ்பேம் பிளாக், அன்ட்டி தெஃப்ட் செக்கியூரிட்டி, மற்றும் தொடர்புகளின் பேக்கப் ஆகியவற்றை வழங்குகின்றது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கும் ஏர்டெல்

Redmi Note 7 Pro சிறப்புகள்

48 எம்பி + 2 எம்பி கேமராவை கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் செல்ஃபி கேமராவுக்கு 13எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 6.3 அங்குல டிஸ்பிளேவை பெற்ற இந்த போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற சார்ஜருடன் கூடிய 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Redmi Note 7 சிறப்புகள்

12 எம்பி + 2 எம்பி கேமராவை கொண்ட ரெட்மி நோட் 7 மாடலில் ஸ்னாப்டிராகன் 660 பிராசெஸருடன் செல்ஃபி கேமராவுக்கு 12 எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 6.3 அங்குல டிஸ்பிளேவை பெற்ற இந்த போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற சார்ஜருடன் கூடிய 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கும் ஏர்டெல்

9,999 ரூபாய் விலையில் ரெட்மி நோட் 7 மாடல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் ஆகும். இந்த மாடல் மார்ச் 6ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை 13,999 ரூபாய், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட பதிப்பு 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மார்ச் 13ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கும் ஏர்டெல்