சாம்சங் J சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.1500 கேஷ்பேக் வழங்கும் வோடபோன் , ஏர்டெல்இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மொபைல் போன் தயாரிப்பாளர்களும் இணைந்து பல்வேறு கேஷ்பேக் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், இந்த வரிசையில் சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் ஏர்டெல் , வோடபோன் ஆகிய இரு டெலிகாம் நிறுவனங்களும் இணைந்து அதிகபட்சமாக ரூ.1500 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சாம்சங் J வரிசை

சாம்சங் J சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.1500 கேஷ்பேக் வழங்கும் வோடபோன் , ஏர்டெல்

சாம்சங் மொபைல் தயாரிப்பாளரின் ஜே வரிசை மொபைல்களான கேலக்ஸி J2 (2017), கேலக்ஸி J5 பிரைம், கேலக்ஸி J7 Prime, மற்றும் கேலக்ஸி J7 ப்ரோ போன்ற மொபைல்களுக்கு  அதிகபட்சமாக ரூ.1500 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குவதாக முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கேலக்ஸி J2 ப்ரோ ரூ. 8,490; கேலக்ஸி J7 Nxt, ரூ. 10,490; மற்றும் கேலக்ஸி J7,ரூ. 16,900 போன்ற மொபைல்களுக்கு கேஸ்பேக் வழங்குவதாக வோடபோன் இந்தியா அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மொபைல் போன்கள் ரூ.6990 முதல் ரூ.19,990 வரையிலான இடைப்பட்ட விலையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

சாம்சங் J சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.1500 கேஷ்பேக் வழங்கும் வோடபோன் , ஏர்டெல்

ஏர்டெல் சாம்சங் கேஸ்பேக்

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 24 மாதங்களில் அதிகபட்சமாக ரூ.5000 ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.1500 கேஸ்பேக் பெறலாம் என குறிப்பிட்டுள்ளது.

இந்த மொபைல் போன்களுக்கு என பிரத்தியேக ரூ.199 டேட்டா பிளான் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிளானில் தினசரி பயன்பாட்டுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக முதல் 12 மாதங்களில் தொடர்ந்து ரூ. 199 அல்லது ரூ.2500 வரையில் ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் ரூ.300 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது.அதனை தொடர்ந்து அடுத்த 12 மாதங்களில் ரூ.2500 ரீசார்ஜ் செய்தால் மீதமுள்ள ரூபாய் 1200 தொகையை வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கேஸ்பேக் வரவு வைக்கும் தொகையை ஏர்டெல் பேமெண்ட் வங்கி வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் J சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.1500 கேஷ்பேக் வழங்கும் வோடபோன் , ஏர்டெல்

வோடபோன் சாம்சங் கேஸ்பேக்

வோடபோன் நிறுவனம் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு ஆகிய இரு பிரிவுக்கும் சிறப்பு கேஸ்பேக் சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சாம்சங் J சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.1500 கேஷ்பேக் வழங்கும் வோடபோன் , ஏர்டெல்

ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.198 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா பயன்பாடு மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்குகின்றது.

முதற்கட்டமாக முதல் 12 மாதங்களில் தொடர்ந்து ரூ. 198 அல்லது ரூ.2500 வரையில் ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் ரூ.300 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது.அதனை தொடர்ந்து அடுத்த 12 மாதங்களில் ரூ.2500 ரீசார்ஜ் செய்தால் மீதமுள்ள ரூபாய் 1200 தொகையை வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வோடபோன் போஸ்ட்பெய்டு ரெட் பிளான் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தும் பட்சத்தில் முதல் 12 மாதங்களில் 600 ரூபாய் மற்றும் அடுத்த 12 மாதங்களில் ரூபாய் 900 என மொத்தம் ரூ.1500 தொகையை திரும்பி பெறலாம்.

கேஸ்பேக் வரவு வைக்கும் தொகையை M-pesa வாலட் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here