பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய பதஞ்சலி சிம் கார்டு

இந்தியாவின் பொது தொலைத்தொடர்பு பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முன்னணி நுகர்வோர் நிறுவனமாக வளர்ந்து வரும் யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் சார்பாக, பிஎஸ்என்எல் பதஞ்சலி சிம் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் பதஞ்சலி சிம் கார்டு

பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய பதஞ்சலி சிம் கார்டு

இந்தியாவின் மிகவும் சவாலான துறையாக மாறியுள்ள டெலிகாம் துறையில் முகேசு அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் விலை குறைந்த டேட்டா திட்டங்கள் மற்றும் அளவற்ற இலவச அழைப்புகளை என வழங்கி வருகின்ற நிலையில், பிஎஸ்என்எல் உட்பட வோடபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் குறைந்த விலை திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சிம்கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதேசி சம்ரித்தி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சிம்கார்டில் மொத்தம் மூன்று விதமான பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகளை பெற்று கொள்ளலாம். 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்பதோடு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும் என 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.792க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகளை பெற்று கொள்ளலாம். 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்பதோடு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும் என 180 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1584க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகளை பெற்று கொள்ளலாம். 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்பதோடு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என 365 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதேசி சம்ரித்தி சிம்கார்டை வாங்குபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வசதியும் வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக சிம்கார்டை வாங்குபவர்களுக்கு பதஞ்சலி தயாரிப்புகளில் 10% சலுகை தரப்படும் என்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டும் சிம் கார்டு வழங்கப்படுகிறது. இருப்பினும் வெகுவிரைவில் பொதுமக்களுக்கும் இந்த சிம் கிடைக்கும் என அதிகார்வப்பூர்வமாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.