இந்தியா தொலைத் தொடர்பு துறையில் பிஎஸ்என்எல், வோடபோன்,ஏர்டெல், ஐடியா மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் வழங்கும் மிகவும் சவாலான விலையில் அதிகபட்ச பலன்களை வழங்கும் ரூ.200 க்கு குறைந்த கட்டணத்தில் உள்ள டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் நன்மைகளை வழங்குவதனை ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.

ரூ. 200 க்கு சிறந்த பிளான்கள்

ஆரம்பத்தில் ரூ.250 முதல் ரூ.300 வரையிலான கட்டணத்தில் மாதம் முழுவதும் 1ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 1ஜிபி மற்றும் அதற்கு கூடுதலான  டேட்டா திட்டங்கள் அடிப்படையாக அனைத்து ஆப்ரேட்டர்களும் வழங்க தொடங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் 118 & 186

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் பொது நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.118 மதிப்பிலான திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உட்பட 1ஜிபி டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

எஸ்டிவி 186

ரூ. 186 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி உயர் வேக டேட்டா தீர்ந்த பிறகு 40kbps வேகத்தில் இணையத்தை அனுகுவதுடன், வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வோடபோன் 198

வோடபோன் நிறுவனம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ரூ.198 கட்டணத்திலான பிளானில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ரோமிங் உட்பட, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.

ஐடியா 199

ஐடியா நிறுவனம் ரூ.199 கட்டணத்தில் 2ஜி/3ஜி/4ஜி பயனாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ரோமிங் உட்பட, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

ஏர்டெல் 199

போட்டியாளர்களை போல இந்நிறுவனம், ரூ.199 கட்டணத்தில் தனது பயனாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ரோமிங் உட்பட, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது. மேலும் குறிப்பிட்ட ஒரு சில பயனாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கப் பெறலாம்.

ஜியோ 149 மற்றும் 198

தொடர்ந்து ஜியோ நிறுவனம், போட்டியாளர்களை எதிர்கொள்ள மிக கூடுதலான டேட்டா நண்மைகள் உட்பட ஜியோ ஆப் வரிசைகளின் இலவச பயன்பாடு வரம்பற்ற டேட்டா என பலவற்றை செயற்படுத்தி வருகின்றது.

ரூ.149 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி உயர்வேக 4ஜி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ரோமிங் உட்பட, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

போட்டியாளர்களை தோற்கடிக்கும் வகையில் ரூ.198 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ரோமிங் உட்பட, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

ஜியோபோன் 49

ஜியோபோன் பயனாளர்களுக்கு ரூ.49 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ரோமிங் உட்பட, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

மறக்கமா உங்கள் விருப்பமான நெட்வொரக் கமென்ட் பன்னுங்க..