நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான்
முகேசு அம்பாணி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடியான திட்டங்களை தொடர்ந்து எதிர்கொள்ளும் வகையில் , இந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல், தற்போது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ரூ.558 மதிப்பிலான திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.

பாரதி ஏர்டெல் ரூ.558

ஜியோ நிறுவனம் தினமும் 1.5 ஜிபி , 2 ஜிபி, 3ஜிபி, 4ஜிபி மற்றும் 5ஜிபி டேட்டா என பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வரும் நிலையில், ஏர்டெல் தொடர்ந்து மிகவும் சவாலான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.558 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று ஜிபி டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது.

84 நாட்களுக்குச் செல்லுபடியாகின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள திட்டத்தில் மொத்தமாக 246 ஜிபி தரவினை வழங்குவதுடன் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாத வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உட்பட நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

சமீபத்தில் வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ. 569 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. ஆனால் வரம்பற்ற அழைப்பு என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் வழங்குகின்றது. இந்தத் திட்டம் 84 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகின்றது. ஜியோ நிறுவனம் ரூ. 509 கட்டணத்தில் 28 நாட்களுக்குத் தினமும் 5ஜிபி டேட்டா வழங்குகின்றது.