இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் சென்னை வட்ட வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வோல்ட்இ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் வோல்ட்இ

ஜியோ நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ சேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்டெல் நாடு முழுவது வோல்ட்இ சேவையை படிப்படியாக விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மும்பை,  மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய வட்டங்கில் செயற்படுத்தி வருகின்றது.

தற்போது சென்னை வட்டத்தில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள 4ஜி வோல்ட்இ வாயிலாக (Voice over Long Term Evolution- VoLTE) வாடிக்கையாளர்கள் உயர்தர ஹெச்டி தர அழைப்புகளை பெறலாம்.

விரைவில் பாண்டிச்சேரி மற்றும் கொல்கத்தா நகரங்களில் தொடங்கப்பட உள்ள வோல்ட்இ தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய வட்டங்களில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் வோல்ட்இ கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.