ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்திய தொலைத் தொடர்பு துறை சந்தை மிகப்பெரிய சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.558 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா தரவல்ல திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் ரூ. 558

சமீபத்தில் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் ரூ.98 கட்டணத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா அதாவது 26 நாட்களுக்கு 39 ஜிபி டேட்டா வழங்குகின்றது. வோடபோன் இந்தியா நிறுவனம், முதன்முறையாக அறிமுகப்படுத்திய தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்குகின்றது.

ஜியோ நிறுவனம் ரூ.299 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளுடன் தினசரி 3ஜிபி டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது. இந்த திட்டங்க்களை எதிர்கொள்ளுவதற்கு வோடபோன் திட்டத்தை நேரடியாக எதிர்க்கும் வகையில் ஏர்டெல் ரூ. 558 பிளானில் நாள ஒன்றுக்கு 3ஜிபி உயர் வேக டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகின்றது. இந்த பிளான் வேலிடிட்டி 82 நாட்கள் செல்லுபடியாகின்றது.

ஜியோ நிறுவனத்தின் மற்றொரு ரூ.509 பிளான் அதிரடியாக நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.