புதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் , தனது ப்ரீபெய்டு வாடிக்கடையாளர்களுக்கு செயற்படுத்தி வரும் ₹99 கட்டணத்திலான பிளானில் மொத்தம் 2ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாடழைப்பு நன்மைகளை வழங்குகின்றது.

ஏர்டெல் 99

ஜியோ மற்றும் நாட்டின் பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனமும் ரூ. 100 க்கு குறைந்த கட்டணத்தில் உள்ள திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் , தனது ரூ.99 பிளானில் இதுவரை 1ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், இனி மொத்தமாக 2 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா உடன் கூடுதலாக எவ்விதமான கட்டுபாடு இல்லாமல் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்க தொடங்கியுள்ளது.

போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ ரூ. 99 கட்டணத்தில் மொத்தமாக 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற வகையில் செயற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை ரூ.558 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் மொத்தம் 84 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் செயற்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கதாகும்.

Recommended For You