ஜியோபோனுக்கு எதிராக பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.169 டேட்டா பிளான் விபரம்ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து சவாலான டேட்டா திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், ஜியோபோன் பயனாளர்களுக்கு புதிய ரூ.153 கட்டணத்திலான திட்டத்தை அறிவித்திருந்ததை தொடர்ந்து ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ரூ.169 கட்டணத்தில் டேட்டா பிளான் விபரங்கள் வெளியாகியுள்ளது.

பார்தி ஏர்டெல் ரூ.169 பிளான்

ஜியோபோனுக்கு எதிராக பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.169 டேட்டா பிளான் விபரம்

பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் செயற்படுத்தி வரும் Mera Pehla Smartphone என்ற திட்டத்தில் முதல்முறை 4ஜி மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ரூ.169 டேட்டா திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அம்பானியின் ஜியோ போன் மாடலில் ஆரம்பத்தில் ரூ.153 டேட்டா பிளானில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 500 எம்பி டேட்டா வழங்குவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், சமீபத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

இந்த திட்டத்துக்கு இணையாக ஏர்டெல் செயற்படுத்தி வந்த ரூ.169 மதிப்பிலான கட்டண திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 500 எம்பி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வந்த நிலையில், தற்போது இந்த திட்டம் புதுப்பிகப்பட்டு நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ஜியோபோனுக்கு எதிராக பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.169 டேட்டா பிளான் விபரம்

மேலே வழங்கப்பட்டுள்ள திட்டம் ஏர்டெல் நிறுவனத்தின்  Mera Pehla Smartphone மொபைல் பயனாளர்களுக்கு 28 நாட்களும் மற்றவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே கிடைக்கப்பெறும்.

ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் மொபைல் மாடல்கள் சாம்சங் கேலக்ஸி J2, கேலக்ஸி J5 பிரைம், கேலக்ஸி J7 பிரைம், கேலக்ஸி J7 பிரீமியம், கேலக்ஸி J7 ப்ரோ, ஐடெல் A40, ஐடெல் A41, கார்பன் A40 இந்தியன், கார்பன் A1 இந்தியன், கார்பன் K9 யுவா, கார்பன் K9 செல்பீ, கார்பன் K9 கவ்ச், செல்கோன் ஸ்மார்ட் 4G, செல்கான் ஸ்டார் 4G, இன்டெக்ஸ் அக்வா N1, அக்வா A4, அக்வா எஸ் 3, ஜென் M70 மற்றும் ஜென் அட்மையர் போன்ற மொபைல்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஜியோபோனுக்கு எதிராக பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.169 டேட்டா பிளான் விபரம் ஜியோபோனுக்கு எதிராக பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.169 டேட்டா பிளான் விபரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here