விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி USIM கார்டு ரூ.20 மட்டும்

நாட்டின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க உள்ளது. மேலும் 4G பிஎஸ்என்எல் USIM கார்டு ரூ. 20 விலையில் வெளியிடப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி

3ஜி சேவை வாயிலாக நாடு முழுவதும் சேவையை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், முதற்கட்டமாக கேரளா வட்டத்தில் 4ஜி சேவையை வழங்க தொடஙுகியுள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடகா வட்டத்தில் 4ஜி மொபைல் டவர்களை நிறுவியுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நோக்கில் செயற்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோ உட்பட ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையிலான திட்டத்தை வெளியிடும் வாயப்புகள் உள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள 2ஜி , 3ஜி சார்ந்த சேவைகளை பெற்று வரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் 4ஜி சேவைக்கு தானாகவே மாறாது என்பதனால் , புதிதாக யூசிம் எனப்படுகின்ற சிம் அட்டையை ரூ. 20 கட்டணத்தில் 4ஜி சேவைக்கு மேம்படுத்தி தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளா வட்டத்தில் சோதனை ஓட்டம் நிகழத்தப்பட்டு வரும் 4ஜி சேவை 3ஜி கோபுரங்கள் வழியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் , மிக விரைவில் 4ஜி கோபுரங்கள் வாயிலாக சேவையை வழங்க பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.

Recommended For You