பிஎஸ்என்எல்

நாட்டின் பொதுத்துறை பி.எஸ்.என்.எல் நிறுவனம் பல்வேறு நிதி சிக்கலில் தவித்து வரும் நிலையில், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த STV 333, STV 444 போன்ற பிரபலமான பிளான்கள் உட்பட 5 ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது.

ரூ.333 கட்டணத்தில் வழங்கப்பட்ட பிளானில் பயனாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்பட்ட பிளான் மற்றொரு ரூ.444 பிளானில் 4 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த பிளானும் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் ஆஃபர்

பொதுத்துறை நிறுவனம் கடந்த 2017-ல் வெளியிட்டு சிக்ஸர் 666, STV 333, STV 444 போன்ற ரீசார்ஜ் திட்டங்களில் தற்போது STV 333, STV 444, STV 339, STV 379, மற்றும் STV 392 என மொத்தமாக 5 ரீசார்ஜ் திட்டங்களை கைவிட்டுள்ளது.

பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் இந்த ரீசார்ஜ் பிளான் கைவிடப்பட்டுள்ள நிலையில், மற்ற வட்டங்களிலும் விரைவில் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

முன்பாக இந்நிறுவனம் வழங்கி வந்த 2.21 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குகின்ற பிஎஸ்என்எல் பம்பர் ஆஃபர் சலுகையை தற்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த சலுகை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக தொடர்ந்து வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

பம்பர் ஆஃபர் சலுகையை பெற ரூ. 186, ரூ. 429, ரூ. 485, ரூ. 666, ரூ. 999, மற்றும் ரூ. 1,699 பிளான்களில் ஏதுனும் ஒன்றை பயன்படுத்தலாம்.