bsnl recharge offers

பொதுத்துறை டெலிகாம் நிறுவனமாக செயல்படும் பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூபாய் 599 கட்டணத்தில் 6 மாதம் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட மிக சிறப்பான அளவில்லா வாய்ஸ் கால் வழங்கும் திட்டமாக கருதப்படுகின்றது.

ஜியோ நிறுனத்தின் தொலைத்தொடர்பு சேவைக்குப் பிறகு தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மட்டும் சீரான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.

பிஎஸ்என்எல் ரூ.599 ரீசார்ஜ் பிளானின் சிறப்புகள்

பிரத்தியேகமாக வாய்ஸ் கால் சேவையை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரீசார்ஜ் பிளானில் எந்த டேட்டா நன்மையும் வழங்கப்படவில்லை.

599 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் பயனாளர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி காலம் வழங்கப்படுகின்றது. இந்த காலத்தில் பயனாளர்கள் வரம்பற்ற முறையில் அழைப்புகளை உள்ளூர் மற்றும் வெளியூர் எண்களுக்கு பேசிக் கொள்ளலாம். இந்த பிளானில் ரோமிங் வழங்கப்பட்டாலும், முதற்கட்டமாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கிடைக்க தொடங்கியுள்ளது. பிஎஸ்என்எல் செயல்படாத மும்பை மற்றும் டெல்லி வட்டாரம் நீங்கலாக மற்றவற்றில் இந்த பிளான் விரிவுப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் அதிகம் வாடிக்கையாளர்களை கவராத நீண்ட வேலிடிட்டி கொண்ட பிளான்களை நீக்கியது குறிப்பிடதக்கதாகும்.