பிஎஸ்என்எல்

இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.151 கட்டணத்திலான திட்டத்திற்கு அபிநந்தன் 151 என்ற பெயரினை வைத்து அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் பயனாளர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.

ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய பயனார்களை இணைப்பதில் முன்னணி வகித்து வருகின்றது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவையை வழங்கி வந்தாலும் தொடர்ந்து அதிகப்படியான டேட்டா நன்மையை அளிக்கின்றது.

பிஎஸ்என்எல் அபிநந்தன் 151 பிளான்

இந்திய தொலைத்தொடர்பு சந்தை மிகுந்த சவாலாக விளங்கி வரும் நிலையில் பொதுத்துறை நிறுவனம் தொடர்ந்து அதிகப்படியான டேட்டா நன்மைகளை வழங்கி வருவது குறிப்பிடதக்கதாகும்.

முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ரூ.151 ரீசார்ஜ் பிளானில் கிடைக்கின்ற நன்மைகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

விலை – ரூ.151

டேட்டா நன்மை – நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா

எஸ்எம்எஸ் – தினசரி 100 குறுஞ்செய்திகள்

வேலிடிட்டி – 24 நாட்கள்

வரம்பற்ற அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றை 24 நாட்களுக்கு பெறலாம். அதன் பிறகு இன்கம்மிங் கால்கள் முற்றிலும் 180 நாட்கள் வரை எந்த கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் பெற இயலும்.