இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் சிறப்பு டேட்டா பிளான் ஒன்றை ஃபிபா உலக கோப்பை 2018 (2018 FIFA World Cup) போட்டிகளை முன்னிட்டு ₹ 149 கட்டணத்தில் நாள் ஒன்றிற்கு 4ஜிபி டேட்டா வழங்கும் பிளானை நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் STV 149

ஜியோ, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் இந்தியா போன்ற தனியார தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட மிகவும் குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து அதிகப்படியான டேட்டா நன்மைகளை வழங்குவதில் பிஎஸ்என்எல் மிகுந்த முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

தொடங்கியுள்ள ஃபிபா உலக கோப்பை 2018 கால்பந்து போட்டிகளை முன்னிட்டு ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை கிடைக்க உள்ள புதிய பிஎஸ்என்எல் STV 149 பிளான் 28 நாட்கள் செல்லுபடியாகும்.  இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி உயர் வேக டேட்டாவை 3ஜி வாயிலாக பிஎஸ்என்எல் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் எவ்விதமான வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படவில்லை.

மேலும் இந்த பிளான் டெல்லி மற்றும் மும்பை வட்டங்களில் கிடைக்கப் பெறாது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2018 போட்டிகளை ஒட்டி ரூ. 251 கட்டணத்தில் 51 நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா வழங்கியது குறிப்பிடதக்கதாகும்.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் , தினசரி டேட்டா பயன்பாடு உள்ள திட்டங்களில் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குகின்றது.  விரைவில் இந்த திட்டத்துக்கு சவால் விடுக்கும் வகையிலான திட்டங்கள் மற்ற நிறுவனங்களும் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.