இந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் என்ற திட்டத்தை அறிவித்து ரூ.187 முதல் ரூ.999 வரையிலான விலையில் திட்டங்களை வெளியிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர்
பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 3ஜி மற்றும் 2ஜி வாயிலாக தனது டெலிகாம் சேவையை வழங்கி வருகின்ற நிலையில் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் தொடர்ந்து மிக சவாலான திட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றது. சமீபத்தில் ஐபிஎல் 2018 போட்டிகளை முன்னிட்டு ரூ.248 மதிப்பில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் 187
ஹேப்பி ஆஃபரில் முதலில் அமைந்துள்ள ரூ.187 மதிப்பிலான திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டு 28ஜிபி டேட்டா அதாவது நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா பெறவும் , வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.
பிஎஸ்என்எல் 349
54 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபரின் ரூ.349 பிளான் தினசரி 1ஜிபி என மொத்தம் 54ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.
பிஎஸ்என்எல் 485
91 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபரின் ரூ.485 பிளான் தினசரி 1.5 ஜிபி என மொத்தம் 136.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.
பிஎஸ்என்எல் 666
129 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபரின் ரூ.666 பிளான் தினசரி 1.5 ஜிபி என மொத்தம் 193.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.
பிஎஸ்என்எல் 999
அதிகபட்சமாக 181 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் பிளான் ரூ.349 பிளான் தினசரி 1 ஜிபி என மொத்தம் 181 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.
இந்த திட்டங்கள் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.