இந்தியாவின் பொது தொலைதொடர்பு நிறுவனத்தின் புதிய சேவையாக பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி தொடங்கப்பட்டுள்ளது.

நிமிடத்திற்கு ரூ.35 கட்டணத்தில் பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி

பிஎஸ்என்எல் செயற்கைக்கோள்

கடந்த புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி வாயிலாக மொபைல் கோபுரங்கள் அலைவரிசை பெறாத இடங்களில் பேசும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை எங்கேயும் பெறலாம்.

இங்கிலாந்து நாட்டின் INMARSAT (International Mobile Satellite Organization)  1979 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்ற செயற்கைகோள் வாயிலாக தொலைபேசி சேவைகளை பெற 14 செயற்கைகோள் பயன்படுத்தி வருகின்றது.

நிமிடத்திற்கு ரூ.35 கட்டணத்தில் பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி

முதலில் மாநில போலீஸ், ரயில்வே, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பிற அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கிடைக்கும் வகையில் வழங்கப்படும். மொபைல் டவர்கள் இல்லாத மலை பிரதேசங்கள், கடல் மற்றும் விமான பயணங்கள் பொழுதும் பயன்படுத்தும் வகையில் வரவுள்ள இந்த சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் எதிர்காலத்தில் வழங்க திட்டமிட்டுள்ளதாக  தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

இந்த சேவையை டாடா கம்யூனிகேஷன்ஸ் (முன்பு விஎஸ்என்எல்) நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்ற இந்த சேவைக்கான உரிமம் வருகின்ற ஜூன் 30, 2017 அன்றுடன் நிறைவடைவதனை தொடர்ந்து இனி பிஎஸ்என்எல் இந்த சேவையை வழங்க உள்ளது.

இந்தியாவில் 1,532 அங்கீகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்புக்கள் உள்ளன, இவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, டி.சி.எல் கப்பல்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு 4,143 அனுமதிகளை கடல்வழி பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல்சேவைக்கு மாற்றப்படும்.

இந்த தொலைபேசி சேவையில் ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சமாக ரூ.30-35 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here