இந்திய பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் சேவை வழங்குநராக விளங்கும் நிலையில் ரூ. 491 கட்டணத்தில் நாள் ஒன்றிற்கு 20 ஜிபி டேட்டா , அதாவது 600 ஜிபி டேட்டாவை 20 Mbps வேகத்தில் வழங்குகின்றது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவைக்கு தொடர்ந்து சவால் விடுக்கும் வகையிலான திட்டங்களை பொதுத் துறை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம்  FTTH (Fibre-to-the-Home) முறையில் ரூ.777 மற்றும் ரூ.1277 என இரு திட்டங்களை செயற்படுத்தியிருந்தது.

இதில் ரூ.777  FTTH பிளானில் மொத்தமாக 500 ஜிபி டேட்டா 50 Mbps வேகத்தில் மாதம் முழுமைக்கும்,  ரூ.1277  FTTH பிளானில் மொத்தமாக 750 ஜிபி டேட்டா 100 Mbps வேகத்தில் ஒரு மாதம் வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் பட்ஜெட் ரகத்தில் சுமார் 20 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு 600 ஜிபி டேட்டா என மொத்தமாக வழங்கப்படாலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 ஜிபி டேட்டா வரை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் தனது அதிகார்வப்பூர்வ ட்விட்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராட்பேண்ட் பயனாளர்களும் பெற்றுக் கொள்ளலாம்.