ரூ.299க்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் : BSNL

நாட்டின் பொதுத்துறை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், ரூ.299 கட்டணத்திலான பிளானுக்கு பிராட்பேண்ட் சேவையில் உள்ள பயனாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ஒரு வருட திட்டத்தில் இணைபவர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக வழங்கப்படுகின்றது.

பிஎஸ்என்எல் ரூ.299

பெரும்பாலான முன்னணி நகரங்களில் ஜியோ நிறுவனத்தின் கம்பி வழி இணைய சேவை ஜியோ ஃபைபர் தொடங்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் வழங்குநராக விளங்கும் பிஎஸ்என்எல் தனது திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ப்ரீபெய்டு மொபைல் பயனாளர்கள் மற்றும் பிராட்பேண்ட் பயனாளர்களுக்கும் அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றது.

ரூ.299 கட்டணத்தில் வழங்குப்படுகின்ற பிராட்பேண்ட் BB BSNL CUL திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை தவிர மற்ற வட்டங்களில் கிடைக்கப் பெறும். அதிகபட்ச உயர் 8Mbps வேகத்தில் இணையத்தை 1.5 ஜி.பி. டேட்டாவை தினமும் பெறலாம். முதல் 1.5 ஜி.பி டேட்டா அளவை கடந்த பிறகு இணைய வேகம் குறைந்தபட்சமாக 1 Mbps வேகத்தில் வரம்பற்ற இணையத்தை பெறலாம்.

இதை தவிர வரம்பற்ற பிஎஸ்என்எல் நெட்வொர்க் அழைப்புகள், மற்ற நெட்வொர்க் அழைப்பு 300 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்படும்.  மேலும் 1GB இடவசதி கொண்ட இமெயில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வரம்பற்ற அழைப்பை இரவு நேரங்களில் , இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை எந்த உள்ளூர் மற்றும் வெளியூர் நெட்வொர்க் நிறுவனத்துக்கும் மேற்கொள்ளலாம்.

கூடுதல் சலுகையாக 11 மாதங்கள் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் பயனாளர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக இணைய சேவையை வழங்க உள்ளது. ரூ. 3,289 கட்டணத்தை செலுத்தினால் 12வது மாதம் இலவசமாக இணையத்தை பெறலாம்.