ஜியோவுக்கு ஆப்பு வைத்த பி.எஸ்.என்.எல் 2ஜிபி கூடுதல் டேட்டா பிளான்கள்

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலினை பொதுத் துறை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது ரூ. 186 முதல் ரூ. 999 வரையிலான திட்டங்களில் இரட்டிப்பாக 2 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை அறிவித்துள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் , ஐடியா போன்ற நிறுவனங்களை விட தொடர்ந்து 3ஜி சேவையில் கூடுதல் டேட்டா நன்மை வழங்குவதில் பொதுத் துறை பி.எஸ்.என்.எல் நிறுவனம் மிக கடுமையான சோதனை முயற்சிகளில் டேட்டா திட்டங்களை வாரி வழங்கி வருகின்றது. முன்பு வழங்கப்பட்ட டேட்டா நன்மையுடன் கூடுதல் நன்மைகளை பெற்று தரும் வகையில் 2ஜிபி டேட்டா முற்றிலும் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ப்ரீபெய்டு திட்டங்களான ரூ 999, ரூ 666, ரூ. 485, ரூ 429 மற்றும் ரூ. 186 ஆகிய திட்டங்களில் 2ஜிபி கூடுல் டேட்டா வழங்கப்படுதுடன் கூடுதலாக  3ஜிபி டேட்டா கொண்ட எஸ்டிவி பிளான்களான ரூ 448, ரூ 444, ரூ 333, ரூ 349 மற்றும் ரூ 187 ஆகிய திட்டங்களிலும் 2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுவது குறிப்பிடதக்கதாகும். மேலும் இந்த திட்டங்களில் அளவில்லா முறையில் தினசரி உயர்வேக டேட்டா பயன்பாட்டுக்கு பிறகு 40 Kbps வேகத்தில் இணையத்தை அனுகலாம்.

குறிப்பாக ரூ.333 திட்டத்தில் 3ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்ட நிலையில், தற்போது தினசரி 5 ஜிபி டேட்டா நன்மையும், ரூ.444 பிளானில் இனி 6 ஜிபி டேட்டா தினசரி வழங்கப்பட உள்ளது. இதைத் தவிர மற்ற பிளான்களான ரூ. 186 யில் நாள் ஒன்றுக்கு இனி 3ஜிபி டேட்டா தினமும் 28 நாட்களுக்கு வழங்கப்படும்.