bsnl recharge offers

பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனம் பயனாளர்களை பெரிதும் கவர்ந்திழுக்காத 5 ப்ரீபெய்ட் ரீசாரஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. குறிப்பாக ரூ.549 தொடங்கி ரூ.4,498 வரையிலான 5 ரீசார்ஜ் பிளான்கள் நீண்ட கால டேட்டா வேலிடிட்டி கொண்டவையாகும்.

பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனம், தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு மிந்த சவாலான பிளான்களை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நீண்ட கால வேலிடிட்டி பிளான்களில் வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பாத உள்ள டேட்டா திட்டங்களை மட்டும் தவிர்த்துள்ளது.

டேட்டா பிளான்கள் விபரம்

இந்த பிளான்களில் வாய்ஸ் கால் நன்மைகள் இடம்பெறவில்லை. எனவே இந்த திட்டங்கள் பயனாளர்களை பெரிதும் கவரவில்லை. நீக்கபட்ட பிளான்கள் காம்போ 549 STV , காம்போ 561 STV , டேட்டா 2798, டேட்டா 3998 மற்றும் டேட்டா 4,498 ஆகியவை ஆகும்.

இவற்றில் காம்போ 549 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, இலவச PRBT 60 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்பட்டது.

அடுத்த காம்போ 561 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, இலவச PRBT 80 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்பட்டது.

டேட்டா 2798 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி உயர்வேக டேட்டா பிறகு வரம்பற்ற டேட்டாவை 40kbps வழங்கப்பட்டு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

டேட்டா 3998 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி உயர்வேக டேட்டா பிறகு வரம்பற்ற டேட்டாவை 40kbps வழங்கப்பட்டு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

டேட்டா 4,498 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி உயர்வேக டேட்டா பிறகு வரம்பற்ற டேட்டாவை 40kbps வழங்கப்பட்டு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.666 பிஎஸ்என்எல் சிக்ஸர் பிளான் வேலிட்டி 129 நாட்களில் இருந்து 122 நாட்களாக குறைக்கப்பட்டது.