நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமாக விளங்கும் பி.எஸ்.என்.எல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 சதவீதம் கூடுதல் டாக்டைம் சலுகைகளை பிஎஸ்என்எல் லக்ஷ்மி ஆஃபர் என்ற பெயரில் வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் லக்ஷ்மி ஆஃபர்

நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு பயனாளர்கள் அனைவருக்கும் பொருத்தும் வகையில் லக்ஷ்மி ஆஃபர் என்ற பெயரில் அக்டோபர் 16 முதல் 21 வரை 50 சதவீதம் கூடுதல் டாக்டைம் பெறும் வகையில் ரூ.290, ரூ.390 மற்றும் ரூ.590 என மூன்று விதமான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

ரூ.290 கொண்டு ரீசார்ஜ் செய்தால் ரூ.435 மதிப்பிலான டாக்டைம் கட்டணத்தை பயனாளர்கள் பெறலாம்.

ரூ.390 கொண்டு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.585 மதிப்பிலான டாக்டைம் கட்டணத்தை பயனாளர்கள் பெறலாம்.

ரூ.590 கொண்டு ரீசார்ஜ் செய்தால் ரூ.885 மதிப்பிலான டாக்டைம் கட்டணத்தை பயனாளர்கள் பெறலாம்.

இந்த சிறப்பு சலுகை திட்டங்கள் அக்டோபர் 16 தொடங்கி அக்டோபர் 21 வரை மட்டுமே கிடைக்கப் பெற உள்ளது.

பிஎஸ்என்ல் நிறுவனம் தொடர்ந்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு சிறப்பு டேட்டா மற்றும் கூடுதல் டாக்டைம் சலுகைகளை வழங்கி வருகின்றது. தீபாவளி பண்டிகையை ப்ரீபெயடு வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் கூடுதல் டாக்டைம் சலுகையை வழங்குவதாக பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.