கூடுதலாக 2.2 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பம்பர் ஆஃபர்

கடந்த செப்டம்பர் முதல் வழங்கப்பட்டு வரும் பிஎஸ்என்எல் பம்பர் ஆஃபர், ஏப்ரல் 30, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பாக ஜனவரி 31 வரை நிறுத்திக் கொள்ளப்படுவதாக இருந்தது. இதனால் பயனாளர்கள் சுமார் 2.2 ஜிபி கூடுதல் டேட்டா நன்மையை பம்பர் ஆப்பர் வாயிலாக தொடர்ந்து பெற வழி வகுக்கின்ற பிளான்கள் மற்ற விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை விட மிக சவாலான திட்டங்களை செற்படுத்தி வரும் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் வெளியிட்டிருந்த பம்பர் ஆஃபர், 2018 செப்டம்பர் முதல் அனைத்து வட்டங்களிலும் உள்ள பின் வருகின்ற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களில் வழங்கி வந்தது.

ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999, ரூ.1,699 மற்றும் ரூ.2,099 போன்ற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் சலுகைகளை வாயிலாக இந்த கூடுதல் டேட்டா நன்மை இனியும் ஏப்ரல் 30 , 2019 வரை நீட்டிக்கப்படட்டுள்ளது.

குறிப்பாக ரூ.186, ரூ.429 மற்றும் ரூ.999 பிளான்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பம்பர் ஆஃபரில் தினமும் 3.2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த பிளான்களில் சாதாரனமாக வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகின்றது.

இதேபோன்று ரூ.485 மற்றும் ரூ.666 சலுகைகளில் பயனாளர்களுக்கு, பம்பர் ஆஃபர் மூலமாக தினமும் 3.7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பிளான்களில் சாதாரனமாக வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் வருடாந்திர திட்டங்களான ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4.2 ஜி.பி. டேட்டாவும், ரூ.2,099 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 6.2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 2 ஜிபி மற்றும் 4 ஜிபி டேட்டா என வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டம், தற்போது மேற்கூறிய பிளான்களை பயன்படுத்தி வரும் பயனாளர்கள் மற்றும் புதிதாக ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு பொருந்தும். தற்போது கேரளா தவிர மற்ற வட்டங்களில் பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி டேட்டா முறையை வழங்கி வருகின்றது.