இன்றைக்கு தொடங்க உள்ள ஐபிஎல் 2019 எனப்படுகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், பிஎஸ்என்எல் ஐபிஎல் 2019 டேட்டா இரண்டு புதிய டேட்டா திட்டங்களை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது.
ரூபாய் 199 மற்றும் ரூபாய் 499 என இரு கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள ரீசார்ஜ் திட்டங்களில் தினசரி உயர்வேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், மற்றும் உடனடி ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம்.
பிஎஸ்என்எல் ஐ.பி.எல் 2019 டேட்டா திட்டங்கள்
பொதுவாக பிஎஸ்என்எல் நிறுவனம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி வருகின்றது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஐபிஎல் 2019 திட்டங்களில் பெரிய அளவில் டேட்டா நன்மையை வழங்கவில்லை என்பதே உண்மையாகும்.
பி.எஸ்.என்.எல் ரூபாய் 199
ப்ரீபெயெட் திட்டங்களில் வழங்கப்பட்டுள்ள ரூபாய் 199 கட்டணத்திலான ரீசார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1 ஜிபி உயர் வேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் தனது சொந்த வட்டத்தில் மட்டும் மேற்கொள்ளும் வகையில் வழங்கியுள்ளது. ரோமிங் மேற்கொண்டால் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
இலவச கிரிக்கெட் PRBT (காலர் டீயூன்) மற்றும் இலவச ஐபிஎல் 2019 போட்டி தொடர்பான எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக மட்டும் இந்த பிளானை பெற்றுக்கொள்ளலாம்.
பி.எஸ்.என்.எல் ரூபாய் 499 ஐபிஎல் பிளான்
ரூபாய் 499 கட்டணத்திலான ரீசார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1 ஜிபி உயர் வேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புளுடன் இலவச ரோமிங் மேற்கொள்ளும் வகையில் வழங்கியுள்ளது.
இலவச கிரிக்கெட் PRBT (காலர் டீயூன்) மற்றும் இலவச ஐபிஎல் 2019 போட்டி தொடர்பான எஸ்எம்எஸ் ஆகியவற்றை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக மட்டும் இந்த பிளானை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பிளான் தமிழ்நாடு உட்பட 20க்கு அதிமான வட்டங்களில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.