ரூ. 248-க்கு தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ஐபிஎல் பேக்

ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு நாட்டின் பொது தொலைத் தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம், தனியார் டெலிகாம் போட்டியாளர்களை விட கூடுதலான டேட்டாவை வழங்கும் நோக்கில் 51 நாட்களுக்கு ரூ.248 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் ஐபிஎல் பேக்

ரூ. 248-க்கு தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ஐபிஎல் பேக்

இன்று தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பயனாளர்கள் கூடுதல் டேட்டா அனுபவத்தினை பெறும் வகையில் பிஎஸ்என்எல் வெளிப்படுத்தியுள்ள ரூ.248 பிளான் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கயாளர்களுக்கும் கிடைக்கப் பெறும். இந்த திட்டம் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30ந் தேதி வரை மட்டும் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி 248 திட்டத்தில் மொத்தமாக 51 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா என்ற அளவினை பயன்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டு மொத்தமாக 103ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

சமீபத்தில் 4ஜி சேவையை வழங்கும் ஜியோ டெலிகாம் ரூ.251 கட்டணத்தில் 102ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்திருந்தது. மேலும் நாட்டின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஹாட்ஸ்டார் ஆப் வழியாக கிடைக்கும் என அறிவித்துள்ளது.

1 COMMENT

  1. எது எப்படி கொடுத்தால் என்ன? பேசும் நேரத்தைவிட திருடும் நேரம் அதிகமாக இருக்கிறது. இதற்குவழி திருடனாய்பார்த்து திருநி்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

Comments are closed.