இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிட்ட சில ரீசார்ஜ்களுக்கு 50 சதவித கேஸ்பேக் சலுயை தசரா திருவிழாவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தசரா கேஸ்பேக் சலுகை விபரம்

தசரா பண்டிகையை முன்னிட்டு ரூ.42, ரூ.44, ரூ.65, ரூ.69, ரூ.88, மற்றும் ரூ.122 ஆகிய ரீசார்ஜ்களை மேற்கொள்ளும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 25ந் தேதி முதல் அக்டோபர் 25ந் தேதி வரையிலான நாட்களுக்குள் மேலே வழங்கப்பட்டுள்ள எதேனும் வாய்ஸ் கால் ரீசார்ஜ் செய்யும் அனைவருக்கும் 50 சதவித கேஸ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற ஒரே நிபந்தனை நீங்கள் அதிகார்வப்பூர்வ பிஎஸ்என்எல் செயலி அல்லது பிஎஸ்என்எல் இணையதளத்தில் மட்டுமே ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.249 திட்டத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகளை வழங்குகின்றது. மேலும் ரூ.429 கட்டணத்தில் 90 நாட்களுக்கு 90 ஜிபி டேட்டா வழங்குகின்றது.