இந்தியாவின் பொதுத்துறை பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் , தனது பிஎஸ்என்எல் லேண்ட் லைன் மற்றும் பிராட்பேண்ட் சார்ந்த பயனாளர்களுக்கு சிறப்பான திட்டங்களை அறிவித்து வருகின்ற நிலையில் ரூ. 99 கட்டணத்தில் 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மையை வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் லேண்ட் லைன்

பிஎஸ்என்எல் நிறுவனம் , தொடர்ந்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் ஏர்டெல் லேண்ட் லைன் இலவச அழைப்புகள் பிளானை போன்ற திட்டத்தை இந்நிறுவனம் செயற்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.99 கட்டணத்திலான திட்டத்தில் வரம்பற்ற பிஎஸ்என்எல் லேண்ட் லைன் அழைப்பு, பிஎஸ்என்எல் மொபைல் எண்களுக்கு என அனைவருக்கும் வரம்பற்ற அழைப்புகளை 30 நாட்களுக்கு பெறலாம். இந்தியாவில் உள்ள 27 வட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த திட்டம் அனைத்து பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சமீபத்தில் ரூ.99 முதல் ரூ. 399 வரையிலான கட்டணத்தில் 4 திட்டங்களை பல்வேறு டேட்டா சலுகையுடன் வழங்கியுள்ளது. முதல் பிளானாக வழங்கப்பட்டுள்ள ரூ. 99 கட்டணத்திலான BBG Combo ULD 45GB  பிளானில் முதல் 1.5 ஜிபி டேட்டா 20 Mbps வேகத்தில் கிடைக்கப் பெறும், அதன் பிறகு 1 Mbps வேகத்தில் இணையத்தை அனுகலாம்.

ரூ. 199 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள BSNL BBG Combo ULD 150GB பிளானில் நாள் ஒன்றுக்கு 5 ஜிபி டேட்டாவை 20 Mbps வேகத்தில் கிடைக்கப் பெறும், அதன் பிறகு 1 Mbps வேகத்தில் இணையத்தை அனுகலாம்.

ரூ. 299 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள BSNL BBG Combo ULD 300GB பிளானில் நாள் ஒன்றுக்கு 10 ஜிபி டேட்டாவை 20 Mbps வேகத்தில் கிடைக்கப் பெறும், அதன் பிறகு 1 Mbps வேகத்தில் இணையத்தை அனுகலாம்.

ரூ. 399 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள BSNL BBG Combo ULD 600GB பிளானில் நாள் ஒன்றுக்கு 20 ஜிபி டேட்டாவை 20 Mbps வேகத்தில் கிடைக்கப் பெறும், அதன் பிறகு 1 Mbps வேகத்தில் இணையத்தை அனுகலாம்.

 

1 COMMENT

  1. ரூ.99க்கு அன்லிமிடெட் கால்களை வழங்கும் பிஎஸ்என்எல் லேண்ட் … – Tamil News

    […] Source link […]

Comments are closed.