தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.392 பிளான் விபரம்இந்தியாவின் பொது தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தமிழ்நாடு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கேம் ஆஃபராக ரூ.392 கட்டணத்தில் தினசரி பயன்பாட்டுக்கு 1ஜிபி டேட்டா  அதிவேக 3ஜி டேட்டா வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் 392

தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.392 பிளான் விபரம்

தமிழ்நாடு வட்ட ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ.392 கட்டணத்திலான டேட்டா பிளானில் தினசரி பயன்பாட்டுக்கு என அதிவேக 3ஜி டேட்டா 1ஜிபி வரை வழங்கப்படுவதுடன், தினசரி பயன்பாடிற்கு பிறகு வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படுகின்றது.இந்த பிளான் வேலிடிட்டி 56 நாட்களாகும்.

இந்த பிளானில் சிறப்பு கேம் சலுகையாக  டிஸ்னி கேம்ஸ் பிரிவின் இலவச விளையாட்டுகளை பெறுவதுடன், இந்த பிளான் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனார்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது. மற்ற இயங்குதள பயன்பாட்டாளர்களுக்கு இந்த சலுகை திட்டம் பொருந்தாது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ உட்பட மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மிகவும் சவாலான திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here