ரூ 798க்கு புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் : BSNL

ஜியோ உள்ளிட்ட தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனம், தனது போஸ்ட்பெயிடு பயனாளர்களுக்கு ரூ.798 கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

மிக கடுமையான சவால் நிறைந்த டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து.  ஏர்டெல், வோடஃபோன், மற்றும் ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் மிக கடுமையாக பின்னடைவு சந்தித்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம், தொடர்ந்து சிறப்பான பிளான்களை பயனாளர்களுக்கு 2ஜி மற்றும் 3ஜி சேவையில் வழங்கி வருகின்றது.

ரூ 798க்கு புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் : BSNL

தற்போது ரூ 798 க்கு போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 120 ஜிபி டேட்டா, இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் கால் , தினமும் 100 குறுஞ்செய்தி போன்ற சேவைகளை பெற முடியும். மேலும் ஒரு வருடம் முழுக்க அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக பெற இயலும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 2ஜி மற்றும் 3ஜி வாயிலாக சேவையை வழங்கி வருகின்றது. பிஎஸ்என்எல் 4ஜி சேவை அடுத்த சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.