நாட்டின் பொதுத் துறை நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மிகவும் சவாலான திட்டங்களை தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக தொட்ந்து செயற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் ரூ. 198 கட்டணத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பு பிளானை வெளியிட்டு முந்தைய பிளான்களில் மாற்றத்தை பி.எஸ்.என்.எல் ஏற்படுத்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல் டேட்டா ஆஃபரில் தொடர்ந்து பல்வேறு நன்மைகளை ஜியோ , ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவங்களை எதிர்கொள்ள பொதுத் துறை நிறுவனம் வழங்கி வருகின்றது. குறிப்பாக ரூ. 14 முதல் நடைமுறையில் உள்ள ரூ. 241 வரையிலான திட்டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 14 கட்டணத்தில் வழங்கப்பட்ட 110 எம்பி டேட்டா பிளான் தற்போது ஒரு நாள் செல்லுபடியாகும் வகையில் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

ரூ.29 கட்டணத்தில் புதுப்பிக்கப்பட்ட பிளானில் தற்போது 1ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்குகின்றது. முன்பாக 150 எம்பி டேட்டா வழங்கப்பட்டது.

ரூ. 40 கட்டணத்திலான திட்டத்தில் 5 நாட்கள் வேலிடிட்டி உடன் 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.

ரூ. 57 கட்டணத்திலான பிளானில் 21 நாட்கள் செல்லுபடியாகுவதுடன் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

ரூ. 68 விலை கொண்ட பிளானில் மொத்தமாக 2ஜிபி டேட்டா 5 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. முன்பாக 5 நாட்களுக்கு 1ஜிபி வழங்கப்பட்டு வந்தது.

ரூ. 78 பிளானில் 4ஜிபி டேட்டா 3 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

ரூ. 82 பிளானில் 4ஜிபி டேட்டா 3 நாட்களுக்கு வழங்கப்படுவதுடன் கூடுதலாக இலவச ரிங்பேக் டியூன் வழங்கப்படுகின்றது.

ரூ. 155 பிளானில் தினமும் 2 ஜிபி டேட்டா 17 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

அதிகபட்சமாக ரூ.241 பிளானில் 7 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதற்கு முன்பாக 2.7 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் செல்லபடியாகின்ற புதிய திட்டங்கள் செப்டம்பர் 6, 2018 வரை கிடைக்கப் பெறும் என பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது.