ரூ.1.1க்கு 1ஜிபி டேட்டா வழங்கும் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்

பாரத் ஃபைபர் FTTH பிராட்பேண்ட் சேவையை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.1.1 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.

பாரத் ஃபைபர்

ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ஜியோ ஃபைபர் பிராட்பேண்டுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனத்தின் ஃபைபர் டூ தி ஹோம் பிராட்பேண்ட் சேவையில் மிக சிறப்பான வேகத்தில் இணையத்தை அனுக வழி வகுக்கப்பட்டுளது.

வாடிக்கையாளர்கள் மிக வேகமான இணையத்தை விரும்ப தொடங்கியுள்ளனர். பயனாளர்கள் முன்பை விட அதிகமான எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை இணையத்தின் வாயிலாக அனுக தொடங்கியுள்ளனர், என்பதை நாங்கள் அறிவோம். எனவே, ஃபைபர் டூ தி ஹோம் முறையில் இணையத்தை அதிவிரைவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது நம் வாடிக்கையாளர்களின் பெரும் அளவிலான டேட்டா தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். “என்று பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனத்தின் CFA இயக்குனர் விவேக் பன்சல் கூறியுள்ளார்.

ரூ.1.1க்கு 1ஜிபி டேட்டா வழங்கும் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்

மேலும் அவர் கூறுகையில் ” மிக விரைவாக இணையத்தை பெறுவதுடன் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்குவதுடன், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாயிலாக அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் பாரத் ஃபைபர் FTTH சேவை பெற விரும்புபவோர்கள் பதிவு செய்யலாம். தேசத்தின் டிஜிட்டல் இந்தியா கொள்கையில் மிக சிறப்பான கவனத்தை பிஎஸ்என்எல் வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குடும்பத்தின் இணைய தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் 35 ஜி.பி. டேட்டா உயர்வேக திறனில் நாள் ஒன்றுக்கு வழங்குவதால், பிராட்பேண்ட் மற்றும் வை-ஃபை தேவைகளை பூர்த்தி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.