90 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் ரூ.485 மட்டும் - பிஎஸ்என்எல் ஆஃபர்இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு சிறப்பு அன்லிமிடெட் கால்கள் மற்றும் டேட்டா கொண்ட திட்டத்தை தமிழ்நாடு வட்டத்தில் உள்ள பயனாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ஆஃபர்

90 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் ரூ.485 மட்டும் - பிஎஸ்என்எல் ஆஃபர்

தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் உள்ள அனைத்து புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பு திட்டத்தை ரூ.186 கட்டணம் மற்றும் ரூ.485 பிளான் ஆகிய இரு திட்டங்களும் அக்டோபர் 21, 2017 முதல் ஜனவரி 18, 2018 வரையில் கிடைக்கப்பெறும் என அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் 186 பிளான்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.186 கட்டணத்தில் வழங்கியுள்ள பிளானில் வரம்பற்ற அழைப்புகளை உள்ளூர் நெட்வொர்க்குகளுக்கு மட்டுமே வழங்குகின்றது. அதாவது தமிழ்நாடு வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது தவிர 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

இந்த திட்டத்தை பெற சிறப்பு சலுகையாக PLAN BSNL186 to 123 என்ற எண்ணுக்கு அனுப்பும் பட்சத்தில் ரூ.157 கட்டணத்தில் இதே திட்டத்தை பெறலாம்.

90 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் ரூ.485 மட்டும் - பிஎஸ்என்எல் ஆஃபர்

பிஎஸ்என்எல் 485 பிளான்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.485 கட்டணத்தில் வழங்கியுள்ள பிளானில் வரம்பற்ற அழைப்புகளை உள்ளூர் மற்றும் வெளியூர் நெட்வொர்க்குகளுக்கு  (மும்பை & டெல்லி தவிர) வழங்குகின்றது. இது தவிர தினசரி பயன்பாட்டுக்கு 1ஜிபி டேட்டா  என 90 நாட்களுக்கு வழங்குகின்றது.

இந்த திட்டத்தை பெற சிறப்பு சலுகையாக PLAN BSNL485 to 123 என்ற எண்ணுக்கு அனுப்பும் பட்சத்தில் ரூ.411 கட்டணத்தில் இதே திட்டத்தை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here