நாட்டின் பொதுத்துறை பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு  நிறுவனம் தொடர்ந்து தனியார் நிறுவனங்களை எதிர்கொள்ள மிகவும் சவாலான பி.எஸ்.என்.எல் 429 டேட்டா பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது.

90ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் 429 பிளான் அறிமுகம்

பி.எஸ்.என்.எல் 429 டேட்டா பிளான்

சமீபத்தில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 4ஜிபி டேட்டா என பல்வேறு பிளான்களை அறிமுகம் செய்து வந்த பிஎஸ்என்எல் தற்போது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள 429 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 90 நாட்களுக்கு வழங்குகின்றது.

90ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் 429 பிளான் அறிமுகம்

சில வட்டங்களில் இந்த திட்டம் 180 நாட்களுக்கு செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.180 நாட்கள் வேலிடிட்டி பெற்றுள்ள வட்டங்களுக்கு மற்ற நொட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா, பிஎஸ்என்எல் அழைப்புகள் நிமிடத்திற்கு 25 பைசா என 90 நாட்களுக்கு பிறகு வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜியோ நிறுவனம் 84 நாட்களுக்கு வழங்குகின்ற தன் தனா தன் 399 திட்டத்துக்கு எதிராக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனமும் சமீபத்தில் ரூ. 399 க்கு 84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 1ஜிபி டேட்டா திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here