மீண்டும் வந்த பிஎஸ்என்எல் லூட் லூ ஆஃபர், 60 % சலுகைகள் முழுவிபரம்கடந்த நவம்பர் 2017யில் வெளியான லூட் லூ போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கான பிஎஸ்என்எல் லூட் லூ ஆஃபர், தற்போது மீண்டும் 60 சதவீத தள்ளுபடி விலையில் மார்ச் 6, 2018 – மார்ச் 31,2018 வரை கிடைக்க உள்ளது.

பிஎஸ்என்எல் லூட் லூ

மீண்டும் வந்த பிஎஸ்என்எல் லூட் லூ ஆஃபர், 60 % சலுகைகள் முழுவிபரம்

தங்களது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் நீண்ட கால அடிப்படையில் கட்டணத்தை செலுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பிரிமியம் பிளான்களான லூட் லூ சலுகை வாயிலாக புதிய மற்றும் பழைய பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெறலாம். புதிதாக லூட் லூ போஸ்ட்பெய்டு சேவையில் இணையும் பயனாளர்களுக்கு சிம் ஏக்டிவேஷன் முற்றிலும் இலவசமாகும்.

12 மாதம் அல்லது 6 மாதம் அல்லது 3 மாதம் என அட்வான்ஸ் தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 60 சதவீதம் வரை சலுகையை வழங்கியுள்ளது.

குறிப்பாக இந்த திட்டத்தில் உள்ள ரூ.1525 பிளானுக்கு 12 மாதம் அட்வான்ஸ் ரென்டல் செலுத்தும் போது 60 சதவீத சலுகை, 6 மாதம் தொகையை செலுத்தும் போது 45 சதவீதம் சலுகை மற்றும் மூன்று மாத முன்பணம் செலுத்தும் பட்சத்தில் 30 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.

லூட் லூ போஸ்ட்பெய்ட் ஆஃபரில் ரூ.1525 முதல் ரூ.225 வலையிலான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றது. முழுமையான திட்டபட்டியலை கீழே உள்ள படத்தில் காணலாம்.

மீண்டும் வந்த பிஎஸ்என்எல் லூட் லூ ஆஃபர், 60 % சலுகைகள் முழுவிபரம்

இந்த போஸ்ட்பெய்டு திட்டம் இந்தியா முழுமைக்கும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.