பிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்

365 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் மஹா 949 பிளான் ரூ.949 கட்டணத்தில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக 157 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குவதாக பிஎஸ்என்எல் டெலிகாம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் மஹா 949

வடகிழக்கு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை தவிர மற்ற ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 157 நாட்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் (டெல்லி & மும்பை தவிர) வழங்குவதுடன் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா என 157 ஜிபி டேட்டா, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகின்றது. இந்த திட்டம் கேரளா வட்டத்தில் தினசரி 200 நிமிடங்களாக அழைப்புகளுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு  158-365 நாட்களுக்கு அனைத்து நெட்வர்க்குகளுக்கும் நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொள்வதுடன், டேட்டா பலன்கள் வழங்கப்படவில்லை, எஸ்எம்எஸ் கட்டணம் 25 பைசா, தேசிய எஸ்எம்எஸ் 35 பைசா வசூலிபக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ.187 முதல் ரூ.999 வரையிலான ஹேப்பி ஆஃபர் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.