இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனம் பி.எஸ்.என்.எல், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுவதும் செல்லுபடியாகின்ற வகையில், பி.எஸ்.என்.எல் மேக்சிமம் 999 (Maximum 999) என்ற பெயரில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் டேட்டாவை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் மேக்சிமம் 999

நீண்ட கால வேலிடிட்டி பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் செயற்படுத்தி வரும் நிலையில், இந்த திட்டங்களுக்கு போட்டியாக நாட்டின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் 365 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையிலான திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டம் நேபால் , ஐம்மூ காஷ்மீர் மற்றும் அஸாம் ஆகிய தொலைத்தொடர்பு வட்டங்களை தவிர்த்து மற்ற இந்நிறுவனத்தின் வட்டங்களில் கிடைக்க உள்ளது. ரூ.999 கட்டணத்தில் இரண்டு பிரிவாக திட்டத்தை பிஎஸ்என்எல் செயற்படுத்தி உள்ளது.

0 -181 நாட்கள்

முதற்கட்டமாக 0-181 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா அதன் பிறகு 40Kbps வேகத்தில் வரம்பற்ற அழைப்புகளை பெற வழிவகுப்பதுடன், ரோமிங் சமயத்தில் மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் இந்த பிளான் அடிப்படையில் நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்,இதனை தொடர்ந்து தினமும் 100 எஸ்.எம்.எஸ் இலொசமாக வழங்கப்பட உள்ளது.

182 – 365  நாட்கள்

இரண்டாவது கட்டமாக 182 to 365 நாட்கள் வரை உள்ள பிளானில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு பிரிவுகளிலும் பிஎஸ்என்எல் மேக்சிமம் 999 பிளான் கிடைக்கப்பெற உள்ளது.