இந்திய பொது தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல்,  ரூ.7 மற்றும் ரூ.16 ஆகிய இரண்டு “மினி பேக்” தரவு திட்டங்களை ஒற்றை நாட்கள் செல்லுபடியாகும் வகையில்  அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் மினி பேக்

பிஎஸ்என்எல் டெலிகாமின் வரையறுக்கப்பட்ட காலம் சிறப்பு கட்டண வவுச்சர் (எஸ்.டி.வி) பகுதியாகத் தொடங்கப்பட்டுள்ள தரவுத் திட்டங்கள் அதிவேக 3ஜி இணையத்துடன் வந்துள்ளன. புதிய பிஎஸ்என்எல் மினி பிளான்ஸ் ரூ 7 மற்றும் ரூ .16 ஆகியவை தொடங்கி மேக்சிம்ம் ரூ.999 அறிவிப்பின் அதிகபட்ச திட்டத்திற்குப் பிறகு இந்த பிளான்கள் வெளியாகியுள்ளது.

ஒற்றை நாள் மட்டுமே செல்லுபடியாக உள்ள ரூ.7 கட்டணத்திலான திட்டத்தில் உயர்வேக 3ஜி தரவுகளை 1ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. இதே போல ரூ. 16 மதிப்பிலான திட்டத்தில் உயர்வேக 3ஜி தரவுகளை 2ஜிபி டேட்டாவை வழங்குகின்றது.

கட்டண விபரங்கள் தொலைத்தொடர்பு வட்டங்களை பொறுத்து ரூ.2 முதல் ரூ.3 வரை வித்தியாசப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.999 கட்டணத்தில் ஒரு வருடம் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக,அதன் பிறகு நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் வழங்க உள்ளது.