பிஎஸ்என்எல் ரூ.118க்கு அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா

இந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், தொடர்ந்து ஜியோ உட்பட தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக ரூ.118 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்பு நண்மை மற்றும் 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் 118

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் , தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.118 கட்டணத்தில் புதிய பிளானை போட்டியாளர்களான ஜியோ , ஏர்டெல் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜியோவின் ரூ.98 பிளான் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 1ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில், ஏர்டெல் ரூ.99 கட்டணத்தில், ஐடியா ரூ.109 கட்டணத்தில் இது போன்ற திட்டத்தை செயற்படுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் டெலிகாம் சென்னை, தமிழ்நாடு, கோல்கத்தா உள்ளிட்ட வட்டங்களில் முதற்கட்டமாக வெளியிடபட்டுள்ள நிலையில் மற்ற வட்டங்களுக்கு விரைவில் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள ரூ.118 கட்டணத்திலான திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையிலான 1ஜிபி டேட்டா வழங்கப்படுதுவடன், கூடுதலாக இலவச காலர் டியூன் (PRBT) வழங்கப்படுகின்றது.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் போட்டியை ஈடுகட்டும் வகையில் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Comments are closed.