பிஎஸ்என்எல் புத்தாண்டு சிறப்பு டேட்டா பிளான் அறிமுகம்அடுத்த சில நாட்களில் மலர உள்ள 2018 ஆம் ஆண்டை முன்னிட்டு சிறப்பு டேட்டா திட்டத்தை நாட்டின் பொது தொலைத்தொடர்பு துறை பிஎஸ்என்எல் ரூ.74 கட்டணத்தில் டேட்டா பிளானை வெளியிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 74

பிஎஸ்என்எல் புத்தாண்டு சிறப்பு டேட்டா பிளான் அறிமுகம்

மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகை கடந்த டிசம்பர் 24, 2017 முதல் ஜனவரி 1, 2018 வரை கிடைக்க உள்ள இந்த திட்டத்தில் ரூ.74 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள டேட்டா பிளானில் தினமும் 1ஜிபி டேட்டா என மொத்தம் 3 நாட்களுக்கு 3ஜிபி உயர் வேக 3ஜி டேட்டா மற்றும் ரூபாய் 10 டாக்டைம் ஆகியவற்றை வழங்குகின்றது.

குறிப்பாக இந்த திட்டத்தில் அழைப்புகள் தொடர்பான சேவைகளில் எவ்விதமான சலுகைகள் வழங்கப்படாமல், தினசரி 100 எஸ்எம்எஸ் கூடுதலாக வழங்கப்படுகின்றது.

பொதுவாக பொது விடுமுறை நாட்களில் எஸ்எம்எஸ்-களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதனால் இந்த திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31, 2017 மற்றும் ஜனவரி01, 2018 ஆகிய தேதிகளில் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்க வழிவகுக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு உங்கள் பிஎஸ்என்எல் ரீடெயிலர்கள் மற்றும் இணையம் வழியாக ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here