புதிய லேப்டாப் வாங்குபவர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு

பொதுத்துறை பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) டெலிகாம் நிறுவனம், புதிய லேப்டாப் மற்றும் பிசி வாங்குபவர்களுக்கு இரண்டு மாத இலவச இணைய சேவையை 20Mbps வேகத்தில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிடைக்கபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலவச பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து சவாலான விலையில் டேட்டா சலுகைகளை அறிமுகம் செய்து வரும் நிலையில், நாட்டின் முதன்மையான பிராட்பேண்ட் வழங்குநரான பிஎஸ்என்எல்  நிறுவனம், புதிதாக லேப்டாப் அல்லது பிசி என இரண்டில் ஏதேனும் ஒன்றை வாங்குபவர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.99 கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட BSNL BBG Combo ULD 45 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 20Mbps வேகத்தில், அதனை தொடர்ந்து வரம்பற்ற இணையத்தை 1Mbps பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மொத்தமாக 45 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது.

04-06-2018 தேதிக்குப் பிறகு லேப்டாப் அல்லது பிசி புதிதாக வாங்கிய ரசீதை கொண்டு பிஎஸ்என்எல் அலுவலகத்தை அனுகினால், பிராட்பேண்ட் சேவையின் வாயிலாக ரூ.99 கட்டணத்திலான பிளானில் அறிமுக சலுகையாக முதல் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக இணையத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை ஜூன் 4ந் தேதி முதல் 90 நாட்களுக்கு மட்டும் கிடைக்கின்றது.

Recommended For You