இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தன்னுடைய புதுபிக்கப்பட்ட அதிகாவப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செயலியை பயன்டுத்தும் நோக்கில் 1ஜிபி இலவச டேட்டா வழங்கும் முறையை செயற்படுத்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல் ஆப்

ஆன்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய டேட்டா சலுகை பி.எஸ்.என்.எல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள இதனை டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் செயலி மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மேம்படுத்தப்பட்ட செயலி 8 எம்.பி அளவில் கிடைக்கிறது. செயலியை இன்ஸ்டால் செய்பவர்கள் தங்களது பிஎஸ்என்எல் மொபைல் போன் நம்பருடன் உள்நுழைய வேண்டும்

அவ்வாறு செய்யும் போது 1 ஜிபி இலவச 2ஜி  மற்றும் 3ஜி டேட்டா பயனர்களின் அக்கவுன்ட்டில் சேர்க்கப்படும். இந்த இலவச டேட்டா டிசம்பர் 31, 2018 வரை மட்டும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.