இந்தியாவில் இணைய வேகம் பரவலாக உயர்ந்து வரும் சூழ்நிலையில் நாட்டின் பொது தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம் 100G ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் சேவையை வழங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் 1000mbps
நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தனியார் நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற 1gbps பதிவிறக்க வேக சேவைக்கு போட்டியாக அதே வேகத்தை பிஎஸ்என்எல் முதற்கட்டமாக 100 முன்னணி நகரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 45 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.330 கோடி செலவில் செயல்படுத்தப்படுகின்ற திட்டம் இந்த நிதி ஆண்டிற்குள் மீதமுள்ள நகரங்களில் இந்த சேவையை பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் வசம் 10ஜி வேகத்திலான இணைய சேவையே உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வாயிலாக வியாபர நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியாக அமையும்.
இந்த திட்டத்தை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மும்பையில் தொடக்கிவைத்தார்